Categories
Uncategorized சினிமா

“கேவலமா இல்ல….” அபிராமியிடம் எகிரிய வனிதா… சும்மா சூடு பிடிக்கும் ப்ரோமோ…!!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா எப்போதும் சக போட்டியாளர்களுடன் சண்டை,வாக்குவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் தனது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற புரோமோ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

இதில் வனிதா மறுபடியும் போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, வாக்குவாதம் செய்வது, திமிராக பேசுவது போன்று தான் நடந்து கொள்கிறார். அதாவது பிக்பாஸ் வீட்டில் ஒரு காபி பவுடரை எடுத்து அதை தனது படுக்கைக்கு கீழ் ஒளித்து வைத்துக் கொண்டார் வனிதா இதனை பார்த்த அபிராமி அவரை “இது ஒன்னும் உங்க ப்ரைவேட் புரோபர்டி இல்ல நீங்க ஒளிச்சு வைக்கிறதுக்கு” என கூறுகிறார். தொடர்ந்து வனிதா அந்த காபி பவுடரை தூக்கி வீசுகிறார். இதைப்பார்த்த ஹவுஸ் மேட் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாய் பேசப்படுகிறது. அதோடு இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |