கன்னட திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அனிருத் ஜட்கர். இவர் பெரும்பாலான கன்னட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் தமிழில் அருண்விஜய் நடிப்பில் 2002 ல் வெளியாகிய முத்தம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கும் இவர் இப்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையில் அனிருத் ஜட்கருக்கும் ஆரூர் ஜெகதீஷுக்கும் இடையில் திடீர் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் இயக்குனருடன் தகராறு செய்து அனிருத் ஜட்கர் நடிக்காமல் பாதியில் வெளியேறியுள்ளார். அதாவது அவர் கேரவன் கேட்டு அடம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து, அனிருத் ஜட்கர் மீது கன்னட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்கப்பட்டது. இப்புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், அனிருத் ஜட்கர் 2 வருடங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் ஜோதே ஜோதேயாலி தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.