கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கேரள சட்டமன்ற தேர்தல் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரளா முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவானது திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் 500 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆரிப் முகமது கான், பினராயி விஜயனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே அவர் சார்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டுள்ளார்.