Categories
சினிமா

கேரள திரைப்பட விழா… “பரபரப்பாக பேசப்பட்டு வரும் வெற்றிமாறனின் பேச்சு”…!!!

கேரள திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற போது அங்கு கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கின்றார்.

அப்போது அவர் கூறியுள்ளதாவது, இன்றைய உலகம் பிளவுப்பட்டிருக்கின்றது. ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலது சரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. மையம் என்று சொல்பவர்களும் வலதுசாரி தான். ஆனால் அதை தேர்வு செய்வதற்கான நேரத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்ததோடு ஒரு இயக்குனர் என்பவர் அரசியல்வாதியோ, கணித மேதையோ, விஞ்ஞானியோ அல்ல. அவர் ஒரு கலைஞர் தான். அவர் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. தான் வாழ்ந்த உலகில் கண்டத்தை அவர் திரையில் பிரதிபலிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு வெற்றிமாறன் பேசிய வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |