Categories
கேரளா மாநிலம் சென்னை

கேரளா வந்த சென்னை எக்ஸ்பிரஸ்…. கடத்தி வரப்பட்ட வெடிபொருட்கள்…. பாதுகாப்பு படையின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கேரள மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் வெடிபொருள் கடத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கூடுக்கப்பட்டது . இதனை தொடர்நது சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு சென்றடைந்தத ரயிலை,ரயில்வே போலீசார் சோதனையிட்டனர்.

 

அப்போது ரயிலில் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் குச்சிகள்,350 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இவற்றை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலையை  பூர்வீகமாக கொண்ட ரமணி என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Categories

Tech |