Categories
தேசிய செய்திகள்

கேரளா நீட்….. மாணவி உள்ளாடை விவகாரம்….. உண்மை கண்டறியும் குழு அமைப்பு…..!!!!

கேரளா கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதன் உண்மையை கண்டறிவதற்கு குழு ஒன்றை மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது.

பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் மாணவியருக்கு உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வு எழுதின.

இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒருவர் தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளாவின் மார்க்கோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியாக பரிசோதித்தனர். மெட்டல் மூலம் பரிசோதனை செய்தலில் மாணவிகளின் உள்ளாடைகளில் காணப்படும் கொக்கி கண்டறியப்பட்டதாக எனது மகளிடம் கூறப்பட்டது.

உடனே கொக்கிகளை அகற்றும்படி கூறப்பட்டது .இல்லாவிட்டால் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். நீட் தேர்வு மைய ஊழியர் மாணவரிடம் இதைவிட முக்கியமானது என்ன உங்கள் எதிர்கால முக்கியமா? அல்லது உள்ளாடைகளா? என்று மிரட்டும் பாணியில் பேசி உள்ளனர். இதன் காரணமாக தேர்வு எழுத வந்ததில் ஏறக்குறைய 90 சதவீதம் மாணவிகள் தங்களது உள்ளாடைகளை கழட்டி ஒரு அறையில் வைக்க வேண்டிய தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும், உள்ளாடையின்றி இத்தகைய பதின்பருவ பெண்கள் தேர்வெழுதும்போது, அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று புகார் அளித்துள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை இது போன்ற சம்பவம் அந்த பகுதி மையத்தில் நடைபெறவில்லை. மேலும் அந்த மாணவி நீட் தேர்வு எழுதினார் . ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக உடனடியாகவோ? தேர்வு முடிந்த பின்னரோ? எந்த ஒரு புகார் அளிக்கவில்லை. ஆடை கட்டுப்பாட்டு வழிமுறைகளில் இது போன்ற நடைமுறைகளை அனுமதிக்கவில்லை என்று தேசிய தேர்வு முகமை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிந்து, மத்திய கல்வித்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து இதில் உண்மை கண்டறியும் கூடுதல் குழு மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை உயர் அலுவலர்கள் கொல்லம் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

Categories

Tech |