Categories
தேசிய செய்திகள்

“கேரளா கொலை வழக்கு”…. சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி…. பெரும் பரபரப்பு…..!!!!

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஷான் பாபு சென்ற ஜனவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதாவது ஷான் பாபுவை கடத்திய கும்பல் அவரை கொடுமைபடுத்தி கொலை செய்தனர். அவரது உடல் முழுதும் 38 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. ஷான்பாபுவை கொலை செய்த கும்பல் அவருடைய உடலை காவல் நிலையம் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபுவை கடத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர் பினுமொன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து கொலை குற்றவாளிகள் அனைவரும் கோட்டயத்திலுள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளிகளில் ஒருவரான பினுமொன் இன்று அதிகாலை சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார். சிறையிலுள்ள சமையல் அறை வழியே இன்று அதிகாலை 5.30 மணியளவில் குற்றவாளி பினுமொன் தப்பி ஓடியுள்ளார். இதனால் சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மிகவும் பாதுகாப்பு நிறைந்த சிறையிலிருந்து சமையல் அறை வழியே கொலை குற்றவாளி தப்பிச் சென்றது எப்படி? என்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |