இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசுகள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒருமுறை நிதி உதவியாக 3 லட்சம் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு 18 வயது முடியும் வரை மாதம் 2000 வழங்கப்படும் எனவும். அவர்களின் கல்வி செலவை பட்டப்படிப்பு வரை மாநில அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.