கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கொரோனா கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே துறை பொதுமக்களின் நலனுக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.