Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதாவது நேற்று மாலை 4 மணி அளவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட  இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 12,13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கேரளாவின் அனைத்து தென் மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது 6 சென்டி மீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை அதிக மழை பெய்யும் என்பதாகும். மேலும் மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யும் என்பதையும் குறிக்கிறது.

Categories

Tech |