Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பெண்களுக்கு சிறப்பு நீதிமன்றம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

கேரளாவின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டே கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்கள் குறித்த இழிவு சொற்களை பாட புத்தகங்களில் இருந்து நீக்க முதல்வர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |