நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி கேரளாவிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 10, 12 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு நடத்தப்பட்டது.
இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் அடுத்த கல்வியாண்டிற்கு மாணவர்கள் தயாராகும் விதமாக ஜூன் 1 முதல் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வகுப்பு தொடர்ந்து நடத்தப்படும் என்று அம்மாநில அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.