Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இரட்டைக்கொலை…. 28ஆம் தேதி வரை… 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!!

கேரளாவில் இரட்டைக் கொலை தொடர்பாக 144 தடை உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். சுபைர் கொலை நடந்த மறுநாளே  ஆர்.எஸ்.எஸ். கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும்  கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நடைபெற்ற  இக்கொலைகளால் பாலக்காடு மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சுபைர் மற்றும் சீனிவாசன் கொலை தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று  வருகிறது.

இரட்டை கொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டாலும் பாலக்காடு மாவட்டத்தில் இன்னும் பதட்டம் நீங்கவில்லை. இதனையடுத்து அங்கு போலீஸ் 144 தடை உத்தரவை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து வருகிற 28-ந் தேதி வரை பாலக்காட்டில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |