ஸ்டூடியோ உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஸ்டூடியோ உரிமையாளரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை வெங்கடேசனின் நண்பர்களான தீனா மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் 5 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேமராவை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான கேமரா திரும்பி கிடைக்காததால் தொழில் நடத்த முடியாமல் வெங்கடேஷ் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்த வெங்கடேஷ் கோவை-காரமடை இடையே ரயில் முன் பாய்ந்து திடீரென தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் தற்கொலைக்கு காரணமான அஜித், தீனா உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.