டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு அணியில் வீரர்கள் தேர்வு தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அந்த போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்த நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த ரவிசாஸ்திரி,விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் விலகலாம் என தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் தனியாக இருந்து வருகின்றது. எதிர்காலத்தில் அவர் கேப்டனாக இருக்கலாம்.
அது உடனடியாக நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் இது நடக்கலாம்.டெஸ்ட் கேப்டன் சியில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் அணி கேப்டன் சியை விட்டு விலகுவதாக அவர் அறிவிக்கலாம். அவரது உடலும் மனதும் தான் அது குறித்து முடிவு எடுக்கும். டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. கேப்டனாக விராட் கோலியுடன் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.