Categories
இந்திய சினிமா சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில்….. “மாற்று உடை இல்லாமல் தவித்த பிரபல நடிகை”….. நடந்தது என்ன?….!!!!

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர், பீஸ்ட் என்ற படத்தின் மூலம் தற்போது மீண்டும் தமிழில் நடித்தார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என்ற பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜாவும் கலந்துகொண்டார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கேன்ஸ் விழாவில் முதல் முறையாக கலந்து கொண்ட நிலையில் அந்த விழாவில் அவர் பல சிக்கல்களை சந்தித்துள்ளார் .

விழாவில் கலந்து கொண்ட பூஜாவின் சூட்கேஸ் திருடு போய் விட்டதாக தகவல் வெளியானது. பூஜை தனது சூட்கேசில் விலை உயர்ந்த பொருள்கள், மேக்கப் மற்றும் நகைகள் வைத்திருந்ததாகவும் அதனை மர்ம நபர்கள் திருடி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பூஜா ஹெக்டே மற்றும் உதவியாளர்கள் பதட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நேரம் பார்த்து இப்படி சூட்கேஸ் தொலைந்ததால் பூஜா மட்டுமல்லாது அவரது உதவியாளர்களும் உணவு கூட உண்ணாமல் அடுத்தகட்ட ஏற்பாடு பற்றி தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் ஒரு வழியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக முடிந்ததாம். கேன்ஸ் நிகழ்ச்சியில் அவர் அணிவதற்குத் தேவையான விலை உயர்ந்த ஆடைகள், நகைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அவர் புறப்பட்டார். பூஜா தனது சூட்கேஸ் ஒன்றை இந்தியாவில் விட்டுவிட்டு வந்ததாகவும், மற்றொன்று பாரிசில் தொலைந்து போய் உள்ளது . நல்ல வேளையாக அவர் எடுத்து வந்த விலை உயர்ந்த நகைகள் அவரிடம் பத்திரமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

Categories

Tech |