மத்திய அரசால் நடத்தப்படும் நாடு முழுவதும் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. பாதுகாப்புத்துறை துணை ராணுவத்தினர் உட்பட மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகின்றது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இவற்றில் சுமார் 40 வருடத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது ஒட்டுமொத்தமாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,44 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தான் அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும் 45 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 1162 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த இடத்தில் 1066 காலி பணியிடங்கள் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1199 பள்ளிகள் இருக்கிறது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 49 பள்ளிகள் இயங்கி வருகின்றது. அதில் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதினால் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்படுவதாக தலைமை ஆசிரியைகள் புலம்பி வருகின்றார்கள். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இரண்டு மணி நேரங்களிலும் வேலை செய்ய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. மொத்தம் உள்ள 1247 பள்ளிகளில் 250 பள்ளிகள் இரண்டாம் தர பள்ளிகள் இவற்றிற்கு தலைமை ஆசிரியர்கள் தேவையில்லை ஆனால் அதற்கு பதிலாக துணை தலைமை ஆசிரியர்கள் செயல்படுவார்கள். மீதமுள்ள ஆயிரம் பள்ளிகளில் 450 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் கடைசியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி கடந்து 2019 ஆம் வருடம் நடைபெற்றுள்ளது அதன் பின் நடத்தப்படவில்லை. இந்த பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறை பல்வேறு நிலைகளை கொண்டதாம். மேலும் எழுத்து தேர்வு நேர்முக தேர்வு திறனறி தேர்வுகளை உள்ளடக்கியதாம். இந்த கல்வியாண்டிற்குள் காலிப்பணியிடங்களின் நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதுடில்லி போன்ற பகுதிகளில் அதிகம் மத்திய அரசு பணியாளர்கள் இருப்பதினால் அதுபோன்ற இடங்களில் பள்ளிகள் இரண்டு சீப்ட் முறைகளிலும் நடைபெறும். அதேபோல் சுமார் 70 பள்ளிகள் இயங்கி வருகின்றது இவற்றிற்கு துணை தலைமை ஆசிரியர்கள் ஊழியர்கள் என மொத்தமாக தலா இரண்டு பிரிவினர் பணியாற்ற வேண்டும் ஆனால் பற்றாக்குறை காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் ஆசிரியர்கள் ஒரே துணை தலைமை ஆசிரியர்களும் பணியாற்ற வைக்கப்படும் சூழல் நிலவி வருவதாக கூறப்படுகின்றது.