Categories
சினிமா தமிழ் சினிமா

கேட்டு வாங்குற விஷயமா இது ?… வீட்டுக்கு போக அடம் பிடிக்கும் அனிதா… வெளியான மூன்றாம் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்தித்து பின்னர் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து உரையாடினார். இதையடுத்து  வெளியான  இரண்டாவது புரோமோவில் ஆரிடம் ரசிகர் ஒருவர் போன் காலில் பேசுகிறார். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் கையில் எவிக்சன் கார்டுடன் வந்திருக்கிறார் கமல் . அந்த கார்டை திறப்பதற்கு முன்னரே அனிதா அவரது பெயரைக் கூறிக் கொள்கிறார் .

‘என்ன சொல்ல வருகிறீர்கள்’ என்று கமல் அனிதாவிடம் கேட்க அப்போது,’ எனக்கு நியூ இயர வீட்டில் செலிபிரேட் பண்ண தோணுது’ என்கிறார் அனிதா . கேட்டு வாங்குற விஷயமா இது ? என்கிறார் கமல் . இதன் பின்னர் ஆஜித்திடம் உங்க கிட்ட ஒன்னு சொல்லிட்டே இருப்பேன் ஞாபகம் இருக்கா ? உங்கள் குரல் இந்த வீட்டில் கேட்கனும்னு.‌‌.. அதை நீங்கள் உணரனும் என்கிறார் கமல். இதையடுத்து யார் பிக்பாஸில் இருந்து வெளியேற போகிறார் என்பது இன்று இரவு தெரியவரும்.

Categories

Tech |