நடிகர் தனுஷிடம் மகன் யாத்ரா கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக விளங்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளன. இந்நிலையில் இருவரும் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து விட்டு, சமீபத்தில் பிரிய போவதாக இணையதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாகவே கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியாகின.
இவர்களது பிரிவால் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தனுஷ், ஐஸ்வர்யா பிரிவால் மனம் தளராது இருவரும் அவரவர் பட வேலைகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, மாறன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடலில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இதனால் தங்கள் சொந்த பிரச்சினைகளை மறக்க தங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
இப்பிரச்சனை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தனுஷ் அவரது மகன் யாத்ராவுடன் மகிழ்ச்சியாக இருந்த புகைப்படம் ஒன்று வெளியானது. ஹைதராபாத்தில் நடக்கும் வாத்தி படப்பிடிப்பில் அவர் மகன் தனுஷுடன் சென்றிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது .இந்த நிலையில் அப்போது தனுஷிடம் அவரது மகன் யாத்ரா, அம்மாவுடன் எப்போது சேர போறீங்க? எங்களுக்காவது நீங்க மீண்டும் சேர வேண்டும் என்றும் எங்கள் நண்பர்கள் கேட்டால் நாங்கள் என்ன சொல்வது என கேட்டுள்ளார். அவர் மகன் கேட்ட கேள்வியால் சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.