Categories
மாநில செய்திகள்

“கேடி மற்றும் ரவுடி லிஸ்ட்” டிஜிபியிடம் கோரிக்கை….. எம்.பி ரவிக்குமார் திடீர் கடிதம்…..!!!!

விழுப்புரம் டிஜிபிக்கு எம்பி ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசால் ஒரு நபரை கேடி மற்றும் ரவுடி லிஸ்டில் சேர்ப்பதற்கு சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான காவல் நிலையங்களில் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. அதற்கு மாறாக ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக அரசியல் கட்சிகளில் இருந்து பாடுபடும் நபர்களின் பெயர்களை மனம்போன போக்கில் சேர்த்து வைத்திருக்கின்றனர். இந்த பட்டியலை காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்பட்டிருப்பது போன்று பட்டியலை சீராய்வு செய்வதோ பெயர்களை நீக்குவதோ கிடையாது. ஒருவேளை பட்டியலில் தொடர்ந்து சில  பெயர்கள் நீடிக்க வேண்டும் என்றால் அதற்கான உத்தரவை உயர் அதிகாரிகளிடம் பெறுவதும் கிடையாது.

இதை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2018-ம் ஆண்டு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த தீர்ப்புக்குப் பிறகும் கூட பழைய நிலையே நீடிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் vs the superintendent of police என்ற வழக்கின் போது சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவை காவல்துறையினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் தங்கள் தலைமையின் கீழுள்ள காவல் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கேடி மற்றும் ரவுடி லிஸ்ட் பட்டியலை சீராய்வு செய்து பொருத்த மற்றவர்களின் பெயரை அதிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |