இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் ஜூலை 16 ஆம் தேதி படம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்கக்கோரி யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

கடிதத்தில், கேஜிஎஃப் 2 ஜூலை 16 வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இத்திரைப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது படம் அல்ல. எங்கள் உணர்வு’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.