Categories
சினிமா

கேஜிஎஃப்- 2 திரைப்படம்…. 11வது நாளிலும் சிறப்பு காட்சி…. வெளியான தகவல்…..!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள கேஜிஎஃப்-2 வெளியான எட்டே நாட்களில் உலகளவில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தமிழகத்தில் 300-க்கும் குறைவான திரையரங்குகளில் வெளியாகிய கேஜிஎஃப் 2, தற்போது அதிகரிக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்வேறு திரையரங்குகள் காலை 8 மணி, 9 மணி சிறப்புக் காட்சிகளை வைத்துள்ளன. இந்த படம் வெளியாகி 11வது நாளான இன்றும் ஹவுஸ்புல்லாகி ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகிய ஒரு நாளைக்கு முன் வெளியான பீஸ்ட் ஓடும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.

Categories

Tech |