கன்னட திரையுலகில் நடிகர் ஹரீஷ் ராய் சாண்டல்வுட்டில் நடிக்க ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவர் பிரபலமான நடிகர் ஆவார். கேஜிஎப் படத்தில் இவர் நடிப்பை என்றும் மறக்க முடியாது. கேஜிஎஃப் படம் இவருக்கு உலக அளவில் பெயர் பெற்று தந்தது. இந்நிலையில் இவருக்கு புற்று நோய் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கூறிய அவர், தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தைராய்டு புற்று நோயுடன் போராடி வருகிறேன்.
அதனைத்தொடர்ந்து புற்றுநோய் கட்டியை மறைப்பதற்காகவே தாடி வளர்க்க்க்கிறேன். தற்பொழுது புற்றுநோய் பாதிப்பு 4 ஆம் கட்டத்தில் உள்ளது. எனவே மாத்திரை மருந்துகளுக்கு மட்டும் மாதம் ரூ.3 லட்சம் தேவைப்படுவதாகவும், இதனால் ஓய்வின்றி படங்களை நடத்தி வருகிறேன் என்று அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.