Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கேக் வெட்டியதால் முன்பகை…. தாக்கிகொண்ட பள்ளி மாணவர்கள்…. எச்சரித்த ஆசிரியர்கள்….!!

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக நடந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும் கேக் வெட்டிய மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்பகையாக மாறியுள்ளது.

இந்நிலையில் தற்போது அதே மாணவர்கள் நேற்று பேருந்து நிலையம் அருகே திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை சமாதானம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |