மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பலியான தந்தைக்கு அவருடைய மகன் தத்ரூபமாக சிலிக்கான் சிலை அமைத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார், இவரது தந்தை ரேவசாஜிபிப் சர்மா கோர். போலீசான இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது 55-வது வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சர்மா கோரின் மகன் தனது தந்தைக்கு சிலிக்கான் சிலை வைக்க வேண்டுமென எண்ணியுள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த சிறந்த சிற்ப கலைஞரை பார்த்து பேசினார்.
பின்னர் சுமார் இரண்டு மாதம் வேலை செய்து ரூபாய் 15 லட்சம் செலவில் அவரது தத்ரூப சிலை உருவானது. இந்த சிலை எந்த சிதைவும் இன்றி சுமார் 50 ஆண்டு காலம் இருக்கும் என சிற்பக் கலைஞர் கூறியுள்ளார். இந்த சிலையை வடிவமைக்க மகன் அருண் மற்றும் மருமகன் ஆகியோர் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த செய்தி இப்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.