Categories
அரசியல் தேசிய செய்திகள்

கெலாட் அரசை கவிழ்க்கும் பா.ஜ.க கனவு பலிக்காது- காங்கரஸ் விளக்கம்…!!!

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க நினைக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் தெரிவித்திருக்கிறது.

 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் 30 எம்.எல்.ஏ.கள் தம்மை ஆதரிப்பதாக  துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 109 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான பணிப்போர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய்மாக்கன், ரந்தித் சுர்ஜிவாலா ஆகியோர் ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளனர்.

அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோழமை சட்டமன்ற உறுப்பினர்களுடன் நள்ளிரவு  வரை ஆலோசனை நடத்தினர். நள்ளிரவு 02:30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 109 உறுப்பினர்கள் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர், இதைத்தவிர இரண்டு சுயச்சை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் விளக்கம் அளித்திருக்கிறது.

Categories

Tech |