Categories
உலக செய்திகள்

“கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சுட்டு கொலை”… இதற்காக மிகவும் வருந்துகிறோம்…போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை…!!!!

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அர்ஷாத் ஷெரீஃப்(49) இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தீவிரமாக ஆதரித்தும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்தும் வந்துள்ளார். இவர் கென்யாவிற்கு சென்றிருந்தார். இந்த சூழலில் அவர் கென்யாவில் தலைநகர் ஐரோப்பிய அருகில் உள்ள கசியானோ என்னும் இடத்தில் ஒரு சாலை தடுப்பில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் பத்திரிக்கையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே சம்பவ இடத்தில் திருட்டுப் போன ஒரு காரை பிடிப்பதற்காக போலீசார் சாலை தடுப்பு ஏற்படுத்திருப்பதாகவும் அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த நிலையில் அர்ஷத் ஷெரீப் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் ஹர்ஷாத் ஷரீபின் மனைவி ஜாவேரியா சித்திக் வெளியிட்டுள்ள twitter பதிவில் நான் ஒரு அன்பான நண்பரை கணவரை எனக்கு பிடித்த பத்திரிகையாளரை இழந்துவிட்டேன் என வேதனையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |