கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்தில் 30 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பா சாவுக்கு நேற்று முன்தினம் மாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்ளனர். இந்த பஸ் மெரு – நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் பாலத்தில் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவீழ்ந்தது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட 30 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.