Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கெட்டுப் போன மட்டன்…..! சிக்கிய பிரபல உணவகம்….. கஸ்டமருடன் செம சண்டை…..!!!!

சேலத்தில் பிரபல உணவகத்தில் கெட்டுப்போன மட்டன் உணவை வழங்கியதால் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி பகுதியில் பிரபல தனியார் உணவகம் ஒன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீலநாயக்கன்பகுதியில் உள்ள பார்பி குயின் உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவர் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்த்த போது மட்டன் கிரேவி கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த உணவை எடுத்துக்கொண்டு உணவகத்திற்கு சென்று விளக்கம் கேட்டனர். அப்போது உணவக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் உணவகத்தில் இருந்த மேலாளர் மற்றும் பணியாளர்கள் கடுமையாக மிரட்டியுள்ளனர். உடனே சபரி அங்கிருந்து வெளியேறினார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரடியாக சென்ற ஆய்வு செய்தபோது அங்கு கெட்டுப்போன பிரியாணி, பரோட்டா, மட்டன் போன்றவை நீண்ட நாட்களாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். மேலும் அந்த உணவகத்தின் மற்ற கிளைகளிலும் இதே குற்றச்சாட்டு எழுந்தது. அங்கெல்லாம் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |