Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சி கெஞ்சி கேட்கணும்…! மத்திய அரசு செய்யும்… அமைச்சர் நம்பிக்கை …!!

கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கும் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அதிமுக – பாஜக அரசுக்கு எதிராக திமுக 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றார்கள் என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களுடைய உணர்வுபூர்வமான பிரச்சனை இது. உணர்வுபூர்வமான பிரச்சனை மதிப்பளித்து, மத்திய அரசு விலையை  குறைத்தால் நல்ல விஷயமாக இருக்கும். மத்திய அரசு மக்களுடைய உணர்வை புரிந்துக்கொண்டு விலை குறைப்பது  நல்ல விஷயம்.

மாண்புமிகு முதலமைச்சர் டெல்லியில் பிரதமரை சந்திக்கும் போதும் சரி, அமைச்சர்கள் சந்திக்கும் போது சரி, மக்களின் உணர்வை பிரதிபலித்துள்ளோம். இதெல்லாம் மக்கள் ஏற்றுகொள்ள முடியாத சுமை  என்பதால் இதனை குறைகின்ற வகையில் வலியுறுத்தி இருக்கிறோம். நிச்சயமாக கருத்தெல்லாம் ஏற்று மத்திய அரசு குறைப்பார்கள் என்ற   நம்பிக்கை இருக்கு.

வாட் வரியை பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக்தில் தான் குறைவு. வாட் வரி மாநிலத்தினுடைய வரி வருவாய்க்கு தான் வருது.  அதே  ஜி.எஸ்.டிக்கு சென்றால் அந்த வரி மத்திய அரசுக்கு சென்று விடும். அவர்களிடம் இருந்து கெஞ்சி கெஞ்சி கேட்டு மக்களுக்கு செய்யணும்.வாட் வரி செலுத்தும் போது மாநில வரி வருவாயாக நம்முடைய கருவூலத்துக்கு வரும்.

அரசு கருவூலத்துக்கு வரும் போது நம்முடைய மக்களுக்கு சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, வீடு கட்ட வசதி என  எண்ணற்ற வசதிகள் நாம வந்து செஞ்சி தர முடியும். எனவே வாட் வரியை குறைத்தால் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வது  கடினம். மக்களுக்கான திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இப்படி எல்லாத்துக்குமே நாம் அதிகம் செய்யும்போது பணம் வந்து எங்கிருந்து வரும் ? எல்லாமே வரி வருவாயில் இருந்து தான் வரும் நம்ம வருவாய் நமக்கே என செலவு செய்து கொண்டு இருக்கின்றோம் என அமைச்சர் கூறினார்.

Categories

Tech |