கூலித்தொழிலாளி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி புகார் கொடுத்ததை அடுத்து புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாணாபுரம் அருகே இருக்கும் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் கூலிவேலை செய்து வந்த நிலையில் சென்ற 18-ஆம் தேதி திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரின் சொந்த ஊரான சதாகுப்பத்துக்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தார்கள்.
இந்நிலையில் அவரின் மனைவி கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யுமாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். இதை தொடர்ந்து கதிர்வேலின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்த பிறகு அவரின் உடல் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.