Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி….. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசின் நகை கடன் தள்ளுபடியை பெறுவதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றுள்ளனர். சிலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியுள்ளனர். சில வங்கிகளில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நிலுவையில் இருந்த நகை கடன்கள் மற்றும் நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கிய நடைபெறுவது குறித்த ஆய்வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ள வேறு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய தனிக் குழுவை அமைத்து 100% ஆய்வு செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் நகைக்கடன் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்கவும் அதன் அறிக்கையை வருகின்ற 30-ஆம் தேதிக்குள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறும் இணை பதிவாளர்கள் அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |