Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி… அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4,805 கோடி ரூபாய்க்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகை பெற்றோர்கள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தல் அறிக்கையின்படி நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இதன்படி 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அது விவசாயக் கடன் பயிர் கடன் வாங்கி வருவதை தவிர்த்து குடும்பத்தில் ஒருவர் உள்ளிட்ட பல விதிககளுடன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி காண சான்றுகளுடன் அவர்களது நகைகளும் திரும்ப ஒப்படைக்கும் பணி இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் இணைந்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4,805கோடி ரூபாய்க்கு நகைக்கடன் தள்ளுபடி  செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே வாரத்தில்ஒரே வாரத்தில் 97.05 சதவீத அளவுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன்  திட்டத்தினால், இதுவரை 12,19,106 பேர் பயனடைந்து உள்ளனர். 5,200 கோடி ரூபாய்க்கு நகைக் கடன் தள்ளுபடி செய்ய திட்டமிட்டு அதில் 97.05 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |