தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அவ்வகையில் முக்கிய வாக்குறுதியாக கருதப்படும் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவிலான நகைகளை வைத்து நகை கடன் வாங்கியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
அந்த நகை கடன் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிபந்தனைகளின் பேரில் நற்பலன் தள்ளுபடி செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு தணிக்கை மீது தற்போது மீண்டும் தணிக்கை நடத்த கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகள் பட்டியல் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளி மாவட்ட அலுவலர்கள் மூலம் இரண்டாம் கட்ட ஆய்வு நடந்தது. இது குறித்து சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவி குமார் கூறுகையில், தேனி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் வேலூர் மாவட்ட தணிக்கை துறையை சேர்ந்த தணிக்கை அலுவலர்கள் எண்பத்தி ஒரு பெயர் சேலம் மாவட்டத்தில் நகை கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை துல்லியமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
தற்போது வரை தொண்ணூத்தி ஒரு வங்கிகளில் ஆய்வு முடிந்துள்ளது. இன்னும் 224 சங்க பயனாளிகள் பட்டியல்,அடுத்தடுத்து ஆய்வுசெய்து துரிதமாக முடிக்க பயன்பெறும் பயனாளிகள் இறுதி பட்டியலை தயாரித்து தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பப்படும். அதன் பிறகு அரசு உத்தரவுப்படி பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டு கடன் நிலுவை இல்லை சான்றிதழ் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் சூப்பர் செக் பணியும் முழுவீச்சில் முடிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.