தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அவ்வகையில் முக்கிய வாக்குறுதியாக கருதப்படும் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவிலான நகைகளை வைத்து நகை கடன் வாங்கியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
அந்த நகை கடன் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிபந்தனைகளின் பேரில் நற்பலன் தள்ளுபடி செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு தணிக்கை மீது தற்போது மீண்டும் தணிக்கை நடத்த கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
அதில் முதல்கட்டமாக நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இரண்டாம் கட்டமாக தோட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சட்டசபைத் தொகுதிகள் ஆன ஆத்துாரில் 7420 பேரின் ரூ.29.43 கோடி தள்ளுபடி, ஒட்டன்சத்திரத்தில் 7332 பேருக்கு ரூ.28.12 கோடி, வேடசந்துாரில் 7113 பேருக்கு ரூ.27.69 கோடி, நிலக்கோட்டையில் 7028 பேருக்கு ரூ.26.38 கோடி, பழனியில் 7201 பேருக்கு ரூ.22.01 கோடி, திண்டுக்கல்லில் 6920 பேருக்கு ரூ.20.71 கோடி, நத்தத்தில் 7106 பேருக்கு ரூ.26.66 கோடி கடன் என, மொத்தம் 50 ஆயிரத்து 120 பேருக்கு ரூ.181 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயனாளிகள் அனைவருக்கும் நகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது