Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. பின்னர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.

இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு மட்டுமில்லாமல் வாக்குறுதி அளித்தபடி எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நகைக் கடன் பெற தகுதியானவர் மற்றும் தகுதியற்றவர் பட்டியல் நிபந்தனைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்களில் 10,18,066 பேர் நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கு தகுதியாக உள்ளனர். மீதம் உள்ள 35,37,693 பேர் தகுதியற்றவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் உடனடியாக நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், “நகைக்கடன் தள்ளுபடியில் அறிவுரைகள் மற்றும் நிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும். நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |