கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகை கடன் பெற்றவர்களின் தங்க நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 40 கிராமக் உட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி 13,47,33 பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் எனவும் 35,37,693 பேர் தகுதியற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாதவர்களின் தங்க நகைகள் ஏலம் விடப்படும் என அறிவித்ததாக பிரபல தனியார் செய்தித்தாள் ஒன்றில் போலியான செய்தி பரவியது. இதனை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியிட தொடங்கின. எனினும் தகுதியற்றவர்களின் நகை தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.