வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சத்தை மோசடி செய்த சங்க செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள அஞ்சுகோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கத்தின் செயலாளராக திருவாடனை திருவடிமிதியூரை சேர்ந்த மணி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சங்கத்தில் கடன் வாங்கிய விவசாயிகள் அவர்களது கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். அதனை முறையாக வரவு வைக்காமல் மணி மோசடி செய்துள்ளார்.
இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது மணி மொத்தம் 2,14,555 ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் உயர்அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவரை இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.