Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்களுக்கு மானியத்தொகை…. தமிழக அரசு அதிரடி…..!!!!!

கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அந்த கடைகளுக்கு வாடகை, மின் கட்டணம்,ஊழியர் சம்பளம், போக்குவரத்து போன்ற செலவினங்களுக்காக அரசு வருடந்தோறும் மானியம் வழங்குகிறது.

ஆனால் மானிய தொகை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக ரேஷன் கடைகளை நடத்த முடியாமல் சங்கங்கள் திணறுகின்றன.  ஆகவே நிலுவை மானியத்தை விரைவாக வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய தொகை வழங்க 150 கோடி ரூபாய் விடுவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பொருள்கள், போக்குவரத்து செலவு, ஏற்றி இறக்கும் கூலி, ரேஷன் கடைகள் வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகின்றன. இதை ஈடுகட்டும் வகையில் மானியத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |