Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறையில் முறைகேடுகளில்…. ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் சக்கரபாணி…!!!

சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், தமிழக அரசு பட்ஜெட்டில் மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.  மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது.

இவ்வாறு கூட்டுறவு சங்கங்களை சீர்குலைக்க முயற்சிசெய்யும்  மத்திய அரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் கூட்டுறவுத்துறையில் பத்து வருடங்களில் முறைகேடு நடந்துள்ளது என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  கூட்டுறவுத் துறையில் கடந்த 10 வருடங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |