யானைகள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர எல்லையில் முசலமடுகு பகுதியில் குடியாத்தம் – பலமனேரி சாலையில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து வாகனங்களை நிறுத்தி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.