சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பேருந்து ஒன்றில் நான்கு மாத பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருடைய மனைவி சரஸ்வதி இவர்கள் இருவரும் புதுச்சேரியில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 4 மணி அளவில் புதுச்சேரிக்கு பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். அப்போது சென்னை வாட்டர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய ஆண் ஒருவர் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பதால் குழந்தையை கொஞ்ச நேரம் வைத்திருங்கள் எனக்கூறி சரஸ்வதியிடம் நான்கு மாத பச்சிளம் குழந்தையை கொடுத்துள்ளார். இதனை அடுத்து குழந்தை சரஸ்வதியின் மடியிலேயே தூங்கிவிட்டது.
பேருந்து மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது குழந்தை சிறுநீர் கழித்ததால் அது குறித்து அந்த நபரிடம் கூறுவதற்காக சரஸ்வதி அந்த நபரை தேடி உள்ளார். ஆனால் அவர் பஸ்ஸில் இல்லை. இது கண்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறி பஸ்சை காவல் நிலையத்தில் நிறுத்துமாறு செய்துள்ளார். இதனையடுத்து சரஸ்வதி பச்சிளம் குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு நடந்ததை விபரமாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர் பற்றிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.