Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூடுதல் தண்ணீர் திறந்து விட்டாச்சி…. 2-ஆம் போக நடவு பணிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

2-ஆம் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தற்போது 2-ஆம் போக நெல் சாகுபடிக்கான நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 1,200 கன அடியாக உயர்த்தி கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  இதனை தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.90 அடியாக இருந்துள்ளது. மேலும் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தேனி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |