நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் கவனக் குறைவாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு கூடுதல் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள அவசரகால மேலாண்மை குழுவிடம் புகார் அளிக்கலாம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் https://imatn.com என்ற இணையதளத்தில் பொறுப்பில் உள்ளவர்களின் தொடர்பு எண்கள் உள்ளன. ஏதேனும் புகார்கள் இருந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.