Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணைய வழி உயர் கல்வியை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். https:tngptc.in என்ற இணையத்தை பயன்படுத்தி அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை பாலிடெக்னிக் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இணையவழி தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |