Categories
தேசிய செய்திகள்

“கூடுதல் இயற்கை எரிவாயு”… விநியோகிக்காத மத்திய அரசு…. நிறுவனங்களின் குற்றச்சாட்டு…..!!!!!

கூடுதல் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு விநியோகிக்காததால் அதனுடைய விலையானது தொடா்ந்து அதிகரித்து வருவதாக நகரப் பகுதிகளிலுள்ள எரிவாயு விநியோக நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.

உள்நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவை நகரப் பகுதிகளிலுள்ள விநியோக நிறுவனங்களுக்கு 6 மாதம் இடைவெளியில் வழங்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சென்ற 2014-ஆம் வருடம் முடிவெடுத்தது. அந்த வகையில் ஏப்ரல், அக்டோபரில் இயற்கை எரிவாயுவானது தேவைக்கேற்ப நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்நாட்டில் கிடைக்ககூடிய இயற்கை எரிவாயு அனைத்தையும் எவ்விதக் குறைப்பும் இன்றி நகரப்பகுதிகளிலுள்ள விநியோக நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. ஆனால் நடப்பு ஆண்டுக்கான இயற்கை எரிவாயுவை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.

இப்போது வரை மாா்ச் மாதத்துக்கான தேவையின் அடிப்படையிலேயே இயற்கை எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் கூடுதல் எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும் நிறுவன உரிமையாளா்கள் தெரிவித்தனா். அத்துடன் இறக்குமதி அதிகரிப்பு, இயற்கை எரிவாயுவின் விலையை அதிகரிக்கச் செய்து இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். அதேபோன்று இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதற்கு 6 மாத தேவையைக் கருத்தில் கொள்ளாமல் கடைசி இருமாதத் தேவையை மட்டுமே கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் விநியோக நிறுவனங்கள் கோரி வருகின்றன.

இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சகக அதிகாரி ஒருவா், “சென்ற வருடம் அக்டோபா் முதல் கடந்த மாா்ச் வரையிலான இயற்கை எரிவாயுவின் தேவை தொடர்பான திருத்தப்பட்ட தரவுகள் நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டியுள்ளது. ஆகவே அவை கிடைத்தவுடன் ஏப்ரல் மாதத்துக்கான இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும். இதற்கிடையில் நகரவிநியோக நிறுவனங்களுக்குக் கூடுதல் எரிவாயுவை வழங்கினால், உரம், எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கான விநியோகம் பாதிக்கப்படும். விநியோக நிறுவனங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |