நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்த் திரைப்படம் ஓ மணப்பெண்ணே. இந்நிலையில் 31 வயதாகும் இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்திருக்கின்றனர். இவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை முடிவு செய்துவிட்டதாகவும் திருமணம் குறித்து தகவல் கூறிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சொல்லப்படுகின்றது.