Categories
சினிமா தமிழ் சினிமா

‘குஷி பட கிளைமேக்ஸ் இப்படி இருந்திருக்கலாம்’… ஐடியா கொடுத்த ரசிகர்… எஸ்.ஜே.சூர்யா சொன்ன சூப்பர் பதில்…!!!

குஷி பட கிளைமேக்ஸ் குறித்து பதிவு செய்த ரசிகருக்கு எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘செல்போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே குஷி படம் முடிஞ்சிருக்கும், ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது’ என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு எஸ்.ஜே.சூர்யா ‘அப்படியெல்லாம் இல்ல. மன வலியில் இரண்டு பேரும்  செல்போனை தொலைத்துவிட்டதாக காட்டுனா போச்சு . பிரண்ட்ஸுக்கு மாறி மாறி போன் பண்ணுனா அவங்க, சிவா ஸ்டேஷனுக்கு போய்விட்டான்.. ஜெனி ஸ்டேஷனுக்கு போய்விட்டாள்.. என சொல்வார்கள் அவ்வளவுதான். எது கிளைமாக்ஸோ அதற்கேற்ப காட்சிகளை உருவாக்க வேண்டும்’ என பதிலளித்துள்ளார் . தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |