பொதுத்துறை வகையான ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதனால் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக பயன் கிடைக்கும். அதாவது பல வங்கிகளில் நிலையான வைப்பு தொகை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் பிரபல வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் நிலையான வைப்பு தொகை திட்டத்திற்கான வட்டியை 30 bps வரை உயர்த்தி உள்ளது. இதனை அடுத்து இனி 15 முதல் 18 மாதங்களுக்கு உண்டான இந்த திட்டத்தில் 6.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரையான வைப்புத்தொகைகளுக்கு வட்டி 6.40% ஆகவும், 2 முதல் 3 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 6.50 ஆகவும், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு 6.60 சதவீதமாகவும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி வீதம் 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.