Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். துபாயின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், பின் அங்கு தமிழ் அரங்கை திறந்து வைத்தார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பை ஏற்று அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற ஸ்டாலின், EXPO நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 9 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,600 கோடி மதிப்பில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர் அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் “நமது இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்” என்று டுவீட் செய்துள்ளார்.

Categories

Tech |